அரைகுறையாய் நிறுத்தப்பட்ட மேம்பாலப் பணிகள் சாலையில் பயணிக்க முடியாமல் எட்டு கிலோமீட்டர் தூரம் சென்று பயணிக்கும் பொதுமக்கள் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை கண்டித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மணலி மற்றும் திருவொற்றியூர் நடுவே எம்ஜிஆர் நகர் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.52 கோடி செலவில் துவக்கப்பட்டது. 530 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் பணி 2018 டிசம்பர் மாதம் தேதிக்குள் முடித்திருக்கவேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்பணி முடிவடையாமல் உள்ளது.
மணலிலிருந்து திருவெற்றியூர் செல்லும் பாதையில் எம்ஜிஆர் நகர் பகுதியில் அமைந்துள்ளது இந்த மேம்பாலம் இப்பாலத்தின் அடியில் கழிவு நீர் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்குக் கழிவுகள் இந்த கழிவு நீர் ஆற்றின் வழியாகவே செல்கின்றன.
இதனால் மக்கள் அந்த ஆற்றைக் கடந்து செல்வதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தான் இன்று பணி நிறைவடையாமல் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைமையில் உள்ளது இதனால் இப்பாதை வழியாக திருவெற்றியூர் செல்லும் மக்கள் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி எண்ணூர் துறைமுக பைபாஸ்சாலை வழியாக திருவெற்றியூர் சென்றடைய வேண்டிய நிலைமை உள்ளது.
இப்பகுதியில் என்னை நிறுவனங்களின் சமையல் எரிவாயு நிறுவனங்கள் போன்ற மிகப்பெரிய தொழிற்சாலைகள் இப்பகுதியில் உள்ளன இந்த தொழிற்சாலைகளின் ஊழியர்களும் ஆயிரத்திற்கும் மேலானோர் மேம்பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் .
அத்தோடு மட்டுமின்றி மணலி எம் ஜி ஆர் நகர் அம்பேத்கர் நகர் எம் எம் டி ஏ எனப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட பகுதி உள்ளன இப்பகுதி காலை மாலை என எல்லா நேரங்களிலும் இப்பகுதி மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது ஒரு நாளைக்கு சுமார் பல்லாயிரக்கணக்கான மேலானோர் இப்பகுதியைப் பயன்படுத்துகின்றனர்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களும் வழியாகவே பயணிக்கின்றனர் அது மட்டும் அல்ல இவ்வழியாக மணலிலிருந்து தண்டையார்பேட்டை செல்வதும் எளிதான பாதையாக அமைகிறது இவ்வளவு பயன்பாட்டான இந்த சாலை மேம்பாலத்தின் கட்டுமான பணி முடிக்கப்படாததால் இன்று மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் நிலவி வருகிறது இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால் திருவெற்றியூரில் இருக்கிற மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய சூழலோ திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஏதோ ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சுமார் 8 கிலோமீட்டர் இம்மக்கள் பயணித்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது .
இப்பகுதியில் குடிசை பகுதிகள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது மக்கள் பயன்பாட்டிற்காக அரசுத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணி இதுவரை முடிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக அரசின் பார்வையில் இந்த மேம்பாலம் படவில்லையா அரசு அதிகாரிகள் அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லவில்லையா 2016 அதிமுக ஆட்சிக் காலம் என்பதால் அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த மேம்பால திட்டம் துவங்கப்பட்டதால் இன்று உள்ள திமுக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான மேம்பாலப் பணிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களா என்று பொதுமக்கள் வருத்தத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுகிற முதல்வர் இந்த மேம்பாலத்தின் பணியை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் மின்னஞ்சல் மூலமாகப் புகார் அளித்தும் அதிகாரிகள் இதுவரை இதைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் மிக வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மேம்பாலத்தின் கட்டுமான பணி முடிவடையாமல் இருப்பதால் தங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர் தங்கள் பணிக்குச் செல்வதற்குக் கூட சிரமமாக உள்ளதாகவும் திருவெற்றியூர் பகுதிகளில் பணியாற்றுகின்ற பெண்கள் பள்ளிக்குச் செல்கின்ற மாணவர்களின் அனைவருமே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
முதல்வர் அவர்கள் உடனடியாக இதற்குச் சரியான தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் அழிக்கப்பட்ட புகார்கள் மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.