இந்தியா – ஆஸ்ட்ரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நாளை மறுநாள், லண்டன் நகரிலுள்ள ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு இரு அணி வீர்ர்களும் இங்கிலாந்து வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐபிஎல் தொடர் முடிந்தவுடனே இந்திய வீரர்கள் இங்கிலாந்து வந்தடைந்தனர். இந்த இறுதி போட்டிக்கான அணிகள் இரண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொது ஆஸ்ட்ரேலிய அணிக்கு பெரும் சிக்கல் வந்துள்ளது.
ஆஸ்ட்ரேலிய வீரர்கள் இந்திய அணிக்கு முன்னதாகவே இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கி விட்டனர். அதில் முன்னணி வீரர்கள் அனைவரும் இடம்பெற்றனர். யாருக்கும் காயம் ஏற்படாது என்று நினைத்த நிலையில், அணியின் முன்னணி முக்கிய பந்து வீச்சாளரான ஹசெல்வுட் காயம் காரணமாக விலகுவதாக அறிவிப்பு வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடியதன் விளைவாக காயம் உண்டாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
ஆஸ்ட்ரேலிய அணியின் அதிரடி பந்து வீச்சின் தூன்களாக இருப்பது ஸ்டார்க், ஹசெல்வுட், கம்மின்ஸ், போலேண்ட் என இந்த நான்கு பேரின் அசாத்திய பந்து வீச்சு தான் ஆஸ்ட்ரேலிய அணியை இறுதி போட்டி வரை கொண்டுவர முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளரான ஹசெல்வுட், ஸ்டார்க்கின் ஆட்டம் தான் அணியின் அஸ்திவாரம். அதில் ஒருவர் விலைகியிருப்பது அணியின் வேகத்தை கடுமையாக பாதிக்கும் . குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களை பொருத்தவரை வேக பந்து வீச்சை விட சுவிங் பந்து வீச்சுக்கு சாதகமானது.
காற்றின் திசை, மைதானத்தின் தன்மை பொறுத்து பந்தின் திரும்பும் விசை, அளவு, கோணம் மாறுபடும். இந்த சுவிங் பந்தை சிறப்பாக மிக எளிமையாக வீசி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை சுலபமாக பறித்து செல்வது ஹசெல்வுட்டின் சிறப்பாகும். கோலி, கில், பூஜாரா போன்ற முக்கிய வீரர்களை தனது சிறப்பான லைன், லெந்த் மூலம் திணற செய்துள்ளார்.
இந்த இறுதி போட்டியில் ஹசெல்வுட் விலகியது இந்திய அணிக்கு பல வகையில் சாதாகமாகியுள்ளது. இருப்பினும் அவருக்கு பதிலாக நெஸ்சரை மாற்று வீரராக அறிவித்துள்ளனர்.