Headlines : இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர்
Headlines : எதிர்க்கட்சி தலைவர் போல காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சி தலைவர் போல காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார்.
400 மட்டுமல்ல மொத்தம் உள்ள 543 தொகுதிகளையும் கைப்பற்றுவேன் என மோடி சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என அவர் கூறனார்.
அமித்ஷா பேச்சுக்கு ஓபிஎஸ் வரவேற்பு
அதிமுகவிற்கு பாஜகவுடனான கூட்டணிக் கதவுகள் திறந்திருப்பதாக அமித்ஷா பேச்சுக்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணிக்கு பாஜகவின் கதவுகள் திறந்திருப்பதாக அமித்ஷா கூறியுள்ளது அவரது நல்ல எண்ணத்தைக் காட்டுகின்றது என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
வெற்றி துரைசாமி குறித்து இன்று தகவல்கள் கிடைக்க வாய்ப்பு.
விபத்துக்குள்ளானகாரில் இருந்து ஐபோன், ஓப்போ செல்போன்களை மீட்ட காவல்துறை போனின் படங்களை வெளியிட்டது.
கடற்படையின் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சிம்லாவில் இருந்து வந்து கொண்டிருப்பதாக மீட்பு பணியை கண்காணித்து வரும் ஹிமாச்சல் அரசு அதிகாரி ஷஷாங்க் குப்தா தெரிவித்துள்ளார்.
மீட்பு பணியில் உள்ளூர் போலீசார், ஐடிபிபி, ராணுவம்,தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : Oats சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
விபத்து நடந்த இடத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ள அணை வரை தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு
கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 2 ஆம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்த போது,
அந்த வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதனை கேட்ட போது காவல் உதவி ஆய்வாளரை வீடியோ எடுத்த சர்மிளா, அதனை அவரது “Instagram” பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சித்தராமையா தலைமையில் இன்று போராட்டம்
டெல்லியில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய அரசை கண்டித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் இப்போராட்டம் நடைபெறவுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று உயர்வு
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று பிப்ரவரி 7ஆம் தேதி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.76.00க்கும், ஒரு கிலோ ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.