இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் காணாமல் போன Vetri Duraisamy குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
சென்னை முன்னாள் மேயராகவும் சைதாப்பேட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சைதை துரைசாமி.
இவரது மகன் வெற்றி. 45 வயதாகும் இவர் பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், Vetri Duraisamy திருப்பூரை சேர்ந்த தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த அவர்கள் லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை உள்ளூரை சேர்ந்த தஞ்சின் என்ற ஓட்டுனர் ஓட்டிச் சென்றுள்ளார்.
கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசாருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், காரை ஓட்டிய தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்
இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். மகன் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்த உடன் சைதை துரைசாமி உடனடியாக இமாச்சல பிரதேசத்திற்கு சென்று காத்திருக்கிறார்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள கல்லில் படிந்திருந்த உடல் திசுக்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . ஆனால் காயமடைந்த நபரின் தலையிலோ உயிரிழந்த நபரின் தலையிலோ காயங்கள் இல்லை.
இது காணாமல் போன வெற்றியின் உடல் திசுக்களா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் . தடயவியல் மற்றும் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹிமாச்சல் டிஜிபி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்துக்குள்ளான காரில் இருந்து 2 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது . ஐபோன் மற்றும் ஓப்போ போனின் படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/cm-in-tn-returned-home-chief-minister-stalin/
இதற்கிடையில் கடற்படையின் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சிம்லாவில் இருந்து வந்து கொண்டிருப்பதாக மீட்பு பணியை கண்காணித்து வரும் ஹிமாச்சல் அரசு அதிகாரி ஷஷாங்க் குப்தா தெரிவித்துள்ளார்.
மீட்பு பணியில் உள்ளூர் போலீசார், ஐடிபிபி, ராணுவம்,தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ள அணைவரை தேடுதல் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன