Headlines : விழுப்புரம் -இறுதி வாக்காளர் பட்டியல்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர்.
5 பேர் கொண்ட குழு அமைப்பு (Headlines)
மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த குழு கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் தலைமையில் அமைக்கப்ட்டுள்ளது.
குடியரசு தின ஒத்திகை
பறையாட்டம், கரகாட்டம் என களைகட்டும் குடியரசு தின ஒத்திகை நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் இந்த குடியரசு தின அணிவகுப்பு மற்றும் நடன ஒத்திகை நடைபெற்றது.
ராமர் கோயில் திறப்பு நிகழ்வு – போலீசார் அனுமதி தேவையில்லை
தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ராமர் கோயில் திறப்பு நிகழ்வு
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குச் சென்ற ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கோயிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்’ என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியினருடன் சாலையில் அமர்ந்து பஜனை பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பிறகுதான் அனுமதி என அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க : cbse public examination ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள்!
ஆபரண தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,830க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.77.00க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.