Headlines: 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலம்
Headlines : சென்னையில் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவிதேசிய கொடியை ஏற்றி வைத்தார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சிறப்பு விருதுகள்
தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்
அரசுப் பள்ளிக்காக தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய ஆயி அம்மாள், ஊடகவியலாளர் முகமது ஜூபேர் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்.
பத்ம விருதுகள்
2024ஆம் ஆண்டுக்கான பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உள்ளிட்ட 132 நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
https://x.com/ITamilTVNews/status/1750753121058574446?s=20
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது.
மதுரை மாநகரம் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் முதல் பரிசைப் பெற்றது. சிறந்த காவல் நிலையத்திற்கான 2ஆம் மற்றும் 3ஆம் பரிசைப் நாமக்கல், பாளையங்கோட்டை காவல் நிலையங்கள் பெற்றன.
குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் நாட்டு வீரர்கள்
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் நாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க : rathnam movie -ரிலீஸ் தேதி இது தான்- படக்குழு தகவல்
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்
பிரான்ஸ் நாட்டின் 95 பேர் கொண்ட அணிவகுப்பு குழுவும், 33 பேர் கொண்ட இசைக்குழுவும் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
பவதாரணியின் உடல் சென்னைக்கு வருகை!
மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று பகல் 3.30 மணி அளவில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

தியாகராயர் நகர் முருகேசன் சாலையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பவதாரிணியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.”
தங்கத்தின் விலை இன்று உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் ரூ.5830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.77500-க்கு விற்பனையாகிறது.