சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான (Hearing) விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துக் கழகத்தில் பணி வாங்கி தருவதாக பணம் பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்தது.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என அமலாக்கத்துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில்,
செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் 2-வது முறையாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க்கில் இருந்த பைல்களை அமலாக்கத்துறையினர் திருத்தி உள்ளதாகவும்,
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் வழக்கில் சந்தர்ப்ப சூழல்கள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
இதையடுத்து நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.
செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம்சாட்டப்படுவதைப் போல எந்த ஆவணங்களும் திருத்தப்படவில்லை.
அனைத்து ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து உரிய அனுமதியுடன் தான் பெற்றோம் என அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் .
Also Read : https://itamiltv.com/special-committee-to-monitor-special-buses/
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை புதன்கிழமை ( பிப்.21) விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒப்புதல் அளித்துள்ளார்.
வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு பதிலாக புதன்கிழமைக்கு (Hearing) விசாரிக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் முறையீட்டை ஏற்று நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.