தமிழ்நாடு ஆந்திர பிரதேசம், தெலங்கான ஆகிய மாநிலங்களில் மே 1ம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் (weather update) என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக வெயிலில் வேலை பார்ப்பவர்கள் கட்டடவேலைக்கு செல்பவர்கள் இந்த வெயிலின் தாக்கத்தால் ரொம்பவே அவஸ்தை பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆந்திர பிரதேசம், தெலங்கான ஆகிய மாநிலங்களில் மே 1ம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா, பீஹார் மாநிலங்களிலும், ஜார்கண்ட் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் ( weather update ) உடலில் நீர் வற்றாமல் இருக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள வழிமுறைகளை தெரிவித்து வருகின்றனர்.