தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு (heavy Rain) வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் முடிந்த கையேடு வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் கடும் குளிர் உறைய வைத்தாலும், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தது.
குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடும் குளிர் காணப்பட்டு வருகிறது.
மேலும் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள்,
மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மற்ற மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில், இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி ஏற்படும்.
https://x.com/ITamilTVNews/status/1752946290911314274?s=20
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : palani murugan temple விவகாரம்: இறுதி தீர்ப்பை பொறுத்தே..! -சேகர்பாபு
இந்நிலையில், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சாரல் மழை (heavy Rain) பெய்து வருகிறது.
விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களான சுக்கிரவார்பட்டி, டி.கான்சாபுரம், விளாம்பட்டி, மாரனேரி, காக்கிவாடன்பட்டி, பள்ளபட்டி, ஆமத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் விடாமல் கனமழை பெய்துள்ளது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.