ஹிமாச்சலப் பிரதேசத்தை புரட்டிப்போடும் கனமழை குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது.
வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைத்து நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து மழை-வெள்ளம் காரணமாக, ஃபெரோஸ்பூா் விரைவு ரயில், அமிர்தசரஸ் விரைவு ரயில் உள்பட 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; மேலும் 12 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன என்று வடக்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து இருந்தது.
ஹிமாச்சலப் பிரதேசத்தை புரட்டிப்போடும் கனமழை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.அந்த பதிவில்,
இமாசலப் பிரதேசத்தின்
மழைப் படையெடுப்பில்
மலை வீழ்கிறது
அந்த வெள்ளத்தில்
மழையே மூழ்கிவிட்டது
என்ற கவிதை காட்சியாவது
கவலை தருகிறது
தீவிர மீட்சி தேவை
புவி வெப்பம் என்பது
பூமிபிளக்கும் வறட்சியும் தரும்
விலாவறுக்கும் வெள்ளமும் தரும்
உலக நாடுகளின் கவனத்திற்கு…என குறிப்பிட்டுள்ளார்.