ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இணைய சேவைகளை வழங்க ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங் அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்டார்லிங் இணைய சேவையை ஜியோவின் சில்லரை வர்த்தக மையங்கள் மூலமாகவும், ஆன்லைன் ஸ்டோர்கள் மூலமும் பெறலாம் என்றும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Also Read : விண்வெளியில் புதிய சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்..!!
உலகிலேயே அதிக டேட்டாவை வழங்கும் ஜியோ நிறுவனம், தற்போது ஸ்பேஸ் எக்ஸுடன் இணைந்து கிராமப்புறங்களிலும் சேவைகளை வழங்க திட்டமிட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது
ஸ்டார்லிங்கின் உபகரணங்களை வழங்குவதுடன், அதனை பொருத்தும் பணிகளையும் ஜியோ நிறுவனமே வாடிக்கையாளர்களுக்கு செய்து தரும் என்றும் அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக இரு நிறுவனங்களும் கூட்டாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.