Himachal accident : இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி குறித்து தகவலறிய 2 நாட்களாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயராகவும் சைதாப்பேட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சைதை துரைசாமி.
அதிமுகவைச் சேர்ந்த இவர், தற்போது அதிமுக தொடர்பான எந்த கட்சி நிகழ்விலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
இவரது மகன் வெற்றி. 45 வயதாகும் இவர் தனது தந்தை சைதை துரைசாமியுடன் இணைந்து சைதை துரைசாமி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மனித நேய அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், வெற்றி துரைசாமி திருப்பூரை சேர்ந்த தனது உதவியாளர் கோபிநாத்துடன் நேற்று முன்தினம் மாலை இமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த அவர்கள் லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை உள்ளூரை சேர்ந்த தஞ்சின் என்ற ஓட்டுனர் ஓட்டிச் சென்றுள்ளார்.
கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை (Himachal accident) இழந்த கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசாருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், காரை ஓட்டிய தன்ஜின் என்பவர் சடலமாக மீட்கப்பட்ட மீட்கப்பட்ட நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்
இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் சைதை துரைசாமியின் மகன் குறித்து தகவல் அறிய 2 நாளாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Chennai Traffic Change – வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!
சில இடங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப்பணியில் சிக்கல் ஏற்படுள்ளதால் தேடும் பணியில் தாமதம் ஏற்படுவதாக மீட்புப் படையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மகன் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்த உடன் சைதை துரைசாமி உடனடியாக இமாச்சல பிரதேசத்திற்கு சென்று காத்திருக்கிறார்.