தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் உரை நிகழ்த்தி தொடங்கி வைப்பது வழக்கம் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநர் காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் சென்று விடுகிறார்.
அந்தவகையில் இன்று 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை உரை நிகழ்த்தி தொடங்கி வைக்க வந்த ஆளுநர் வழக்கம் போல் வந்த வேகத்தில் காரில் ஏறிச்சென்றார். இதற்கு சட்டப்பேரவையில் தேசிய கீதம் படாமல் அவமதிப்பு செய்ததாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி இதுபோன்று செய்வது முதல் முறை அல்ல கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது முதல் உரையை முழுமையாக படித்தார். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
Also Read : ஓயாத நெருக்கடி – ராஜினாமா செய்கிறாரா ஜஸ்டின் ட்ரூடோ..?
2023 உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்காததால் அவையில் பிரச்னை எழுந்தது. அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவையில் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் பதிலடி கொடுக்க, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.
2024 ஆம் ஆண்டு உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார். சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார்.
2025 ஆம் ஆண்டு முந்தைய ஆண்டில் கூறிய அதே காரணத்தை மீண்டும் எழுப்பி, அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார்.