தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, டிசம்பர் 4 ஆம் தேதி திருவள்ளூர்(thiruvallur) மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டி.பிரபுசங்கர் டிசம்பர் 4 ஆம் தேதி திருவள்ளூர்(thiruvallur) மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.