தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

holidays-for-schools-in-17-districts
holidays for schools in 17 districts

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு வங்க கடல் முதல், தமிழ்நாடு கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 12- ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

holidays-for-schools-in-17-districts
holidays for schools in 17 districts

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், கடலூர், நாகை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts