சைனஸ் பிரச்சினையால் ஏற்படும் தலைவலியை (sinus headache) நம்முடைய வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்து வீட்டு வைத்தியங்களின் மூலம் சரிசெய்ய முடியும். அந்த வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
இஞ்சி:
இஞ்சியை சாறாக எடுத்து அதில் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வர சைனஸ் பிரச்சினை தீர்வதோடு சைனஸால் ஏற்படும் தலைவலியும் (sinus headache) குறையும். இஞ்சியை டீயில் சேர்த்துக் கூட குடித்து வரலாம்..
மஞ்சள்:
தினமும் டீ அல்லது உணவுகளோடு சேர்த்து ஒரு ஸ்பூன் இஞ்சியுடன் மஞ்சளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பில் தேங்கியிருக்கும் சளி வெளியேறுவதோடு, சைனஸ் தொல்லையில் இருந்தும் அதனால் ஏற்படும் தலைவலியில் இருந்தும தீர்வு கிடைக்கும்.
இலவங்கபட்டை மற்றும் தேன்:
ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிட்டு வருவது சைனஸ் பிரச்சினையின் காரணமாக உண்டாகும் தலைவலிக்கு மிகச்சிறந்த தீர்வாகும்.
அதிமதுரம், ஆடாதோடை, கண்டங்கத்திரி, சித்தரத்தை, தாளிசப்பத்திரி, திப்பிலி இவை அனைத்தையும் தனித்தனியாக பொடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். சம அளவு எடுத்து , 1ஸ்பூன் பொடியை போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு 1/2 டம்ளராக வற்றியதும் மிதமான சூட்டில் அருந்தவும்.
சைனஸ் குணமாக இதை தவிர ஒரு சிறந்த வைத்தியம் எதுவும் இல்லை.