கடந்த மே மாதத்தில் இருமுறை கேஸ் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கேஸ் சிலிண்டர் விலையை ரூ. 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூ.400 விலை குறைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
நேற்று இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மானிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து சிலிண்டர் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஒட்டு மொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கேஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தான் தற்போது சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 2016 மே 1 ஆம் தேதி பிரதமரின் உஜ்வாலா திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட பின்னர், இந்த திட்டத்தின் மூலம் சுமார் 5 கோடி கேஸ் இணைப்புகள் தற்போது வரை கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் வீட்டு பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டரின் விலை டெல்லியில் 1,053 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று முதல் ரூ.903-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் 1,118 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.