‘காலை உணவுத் திட்டம்’ உருவானது எப்படிகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியது வைரலாகி வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்து வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின்,காலை உணவுத் திட்டம், பெரும்பாலான பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே புதுப்புது திட்டங்களைக் கொண்டு வந்து, முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.மேலும் ‘காலை உணவுத் திட்டம்’ உருவானது எப்படி? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரித்தார்.
அப்போது சென்னையில் உள்ள அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன்.அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளை சந்தித்து பேசிய போது அவர்களிடம் காலையில் என்ன உணவு சாப்பிட்டீங்க.. என்று கேட்டேன் . அதற்க்கு பெரும்பாலான மாணவிகள் நாங்கள் காலை உணவு சாப்பிடவில்லை என்று தெரிவித்தனர்.
”எங்கள் வீட்டில் சமையல் செய்யப்படவில்லை என்று ஒரு மாணவி தெரிவிக்க.. மற்றொரு மாணவி மதியம் பள்ளியில் மதிய உணவு வாங்கிக் கொண்டு சாப்பிட்டு அம்மா சொல்லியதாக என்னிடம் தெரிவித்தார்.
இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் காலை உணவு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று முடிவெடுத்ததாகவும், இதற்கு அதிகாரிகள் நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தன.
ஆனால் நான் காலை உணவு திட்டத்தை விட வேறு எதுவும் முக்கியமாக இருக்க முடியாது என்று தெரிவித்து கட்டாயப்படுத்தி இந்த திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டேன்.
மேலும் இந்த திட்டம் தொடர்பாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் களஆய்வு நடத்தப்பட்டது. அந்த களஆய்வில் ரத்தசோகை பாதிப்பால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அளவிற்கு காலை உணவு வழங்கினால் உனக்கு கூடுதலாக சத்துக்கள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். குழந்தைகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டேன் என்று தெரிவித்தது நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தை ஈர்த்தது.