இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பணப்பரிமாற்றம் என்பது தினசரி வாழ்க்கை முறையில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது (bank holidays).
எனவே, வங்கி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் (bank holidays) எப்போது என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமுமம் மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் வங்கி வேலை நாட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், அடுத்து வரும் 2023 ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்களைப் பார்க்கலாம்.
- ஜூலை 6,2023 – MHIP நாள் (மிசோரம் பகுதியில் வங்கிகளுக்கு விடுமுறை).
- ஜூலை 8,2023 – 2வது சனிக்கிழமை விடுமுறை.
- ஜூலை 11, 2023 – கேர் பூஜை (திரிபுரா பகுதியில் வங்கிகளுக்கு விடுமுறை).
- ஜூலை 13, 2023 – பானு ஜெயந்தி (சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை).
- ஜூலை 17,2023 – யு டிரோட் சிங் டே (மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை).
- ஜூலை 22, 2023 – 4வது சனிக்கிழமை விடுமுறை.
- ஜூலை 29, 2023 – முஹாரம் விடுமுறை.
- ஜூலை 31, 2023 – ஷஹீத் உதம் சிங் தியாகி தினம் (ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை).
பொதுமக்கள் இந்த விடுமுறை நாட்கள் பட்டியலின் அடிப்படையில் தங்களது வங்கிப் பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.