12 th exam |தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கியுள்ளது. இன்று இந்த தேர்வு தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டத்தில், பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 13,603 மாணவா்கள், 16,400 மாணவிகள் என மொத்தம் 30,003 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
திருச்சி மாவட்டம், முழுவதும் மொத்தம் 131தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தனித் தேர்வா்களுக்கு 9 தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ” ஆதீனத்தை மிரட்டிய விவகாரம்..” சிக்கிய அரசியல் புள்ளிகளின் பின்னணி இதுதான்..!
இதே போல் திருச்சி மத்திய சிறையில் 9பேர் பிளஸ் 2தேர்வு எழுதுகின்றனர். அதற்காக அங்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களை கண்காணிக்கும் வகையில் 250பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1300 ஆசிரியர்களும் இதற்காக கண்காணிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: முதல்வருக்கு த.வெ.க கட்சித் தலைவர் வாழ்த்து
இன்று காலை முதல் மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்து தங்களை படித்தவர்களை மீண்டும் மனப்பாடம் செய்து வருகின்றனர்.
இதே போல் தமிழகம் முழுவதும் வரும் 4ஆம் தேதி 11ஆம் வகுப்பு தேர்வு துவங்க உள்ளது.இத்தேர்வில் 15,211 மாணவா்கள்,17,102 மாணவியா் என மொத்தம் 32,313 போ எழுத உள்ளனா்.