கன்னியாகுமரி அருகே மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி பார்சல் கட்டிய கணவர் தெருநாய்களால் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் மாரிமுத்து (35) என்பவர் அவரது மனைவி சந்தியா (30) உடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மனைவி சந்தியா வெளியூரில் வேலை செய்து வரும் நிலையில் அவ்வப்போது கணவனை வந்து பார்த்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது .
மனைவி வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மனைவி மீது எப்போதும் சந்தேகம் அடைந்த கணவன் அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் மனைவி சந்தியா மீது எப்போதும் சந்தேக கண்ணுடன் பார்க்கும் மாரிமுத்து நேற்று மீண்டும் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார் .
Also Read : புதுச்சேரியில் பேருந்துக் கட்டணம் உயர்வு..!!
ஒரு கட்டத்தில் சண்டை முற்றிபோக கோபம் தலைக்கேறிய மாரிமுத்து சந்தியாவை கொன்றுள்ளார் . இதையடுத்து மனைவியை துண்டு துண்டாக வெட்டிய மாரிமுத்து உடல் பாகங்களை கேரி பையில் வைத்து வெளியில் சென்றுள்ளார் .
அப்போது அவரை சுற்றிவளைத்த நாய்கள் தொடர்நது அவரை துரத்த சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தியதில் அவர் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார் . பன்றி இறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்துள்ள மாரிமுத்து மனைவியும் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்த முயன்றாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.