இந்திய இளைஞர்களில், சராசரியாக, 3 பேரில் ஒருவருக்கு “Hypertension”.. அதாவது ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
மாறிவரும் வாழ்க்கை சூழலே இதற்கு முக்கியமான காரணம் என்றும் பணியில் ஏற்படும் மன அழுத்தம் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்பட காரணமாக உள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த உயர் ரத்த அழுத்தத்த நாம கட்டுப்படுத்தலைனா ஹார்ட் அட்டாக், பக்கவாதம், பார்வை இழப்புனு நிறைய ப்ரோப்லம்ஸ ஃபேஸ் பண்ண வேண்டியிருக்கும்.
இந்த ரத்த அழுத்த பாதிப்பை `சைலன்ட் கில்லர்’ என்றே சொல்லலாம். சரி ரத்த அழுத்தத்த (Hypertension) எப்படி காட்டுக்குள்ள வைக்கிறது.
இளநீர் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பானம் மட்டுமின்றி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவக்கூடியது. இது, உடலுக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்கும். முக்கியமாக உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதனால் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை விளைவிக்கக்கூடியது. இதில் உள்ள அதிகளவிலான பொட்டாசியம், இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.
மாதுளையில் பொட்டாசித்துடன் சேர்த்து நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் கே சத்துக்களும் உள்ளன. எனவே மாதுளையை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.
இதுமட்டுமில்லாம, ஆரஞ்சு ஜூஸ், வாழைப்பழம், பூண்டு, பசலைக்கீரை, கற்பூரவள்ளி, முருங்கைக்காய், நெல்லிக்காய், முள்ளங்கி போன்றவற்றையும் டெய்லி food routineல எடுத்துட்டு வந்தோம்னா “hypertension” control பண்ண முடியுமனு டாக்டர்ஸ் சொல்றாங்க..