அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை தொடங்கி வைக்க கோவைக்கு வந்துள்ளேன் . கோவை மக்கள் அன்பான, பாசமான மக்கள்; தொழிற்துறையில் சிறந்த மண்டலம் கோவை.
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் இருக்கும் மண்டலம்; பழமையும், புதுமையும் கலந்த பகுதி கோவை.
கோவை பகுதி மக்கள் விருந்தோம்பல் உள்ளிட்ட நற்பண்புகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
8 மற்றும் 10ம் வகுப்பு படித்து தொழிற் கல்வி மேற்கொள்ளும் மாணவர்களும் பயன் பெறலாம்.
Also Read : “தாத்தா வந்துட்டாரு” ஓடிடியில் வெளியானது கமல்ஹாசனின் இந்திய 2..!!
நாம் செயல்படுத்துகிற திட்டங்களில் ஒரு சில திட்டங்கள் தான், மனதுக்கு நெருக்கமான திட்டங்கள், அதில் ஒன்று தான் “தமிழ்ப் புதல்வன்” திட்டம். இத்திட்டத்தை தொடங்குவதற்கு நான் தேர்ந்தெடுத்த இடம், கோவை. காரணம், இங்குள்ள அன்பான மக்கள், சேவை மனப்பான்மை கொண்ட மக்கள்.
நம் இலக்கையும், இலட்சியத்தையும் எதிர்காலத்தில் எடுத்து செல்கிற இளைஞர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம், “நான் முதல்வன்” திட்டம். இதன்வழி, இதுவரை 28 இலட்சம் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து, வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை மேலும் மேலும் அதிகரிக்கவும், அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் படிக்கிற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் நோக்கிலும், உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும், ‘தமிழ்ப் புதல்வன்” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.