வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம் பெற வேண்டுவதாக அண்ணாமலை X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் இரண்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடப்போம் நலன் பெறுவோம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
இதனால் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடப்போம் நலன் பெறுவோம் திட்டத்தை திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுரை வழக்கி உள்ளனர்.
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற வேண்டுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், விரைந்து நலம்பெற்று, மக்கள் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.