தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை ஓயமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது..
“மதுவிலக்கு என்றால் அது பா.ம.க. தான். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் பா.ம.க. எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை கடந்த காலங்களில் நானும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய போராட்டங்களே சாட்சி. உதாரணத்திற்காக ஒரு சில போராட்டங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு…
- பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே 1984 ஆம் ஆண்டில் மதுவுக்கு எதிராக மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நான் நடத்தினேன்.
- 1989 ஆம் ஆண்டில் பா.ம.க. தொடங்கப்பட்டதும் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானமே தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான்.
- 01.11.1989 அன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் மதுவிலக்கு கோரி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
- 12.10.1995 பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது, ஆபாச ஒழிப்பு மாநாட்டை நான் நடத்தினேன்.
- 27.12.2001 அன்று, தமிழக அரசு அறிமுகப்படுத்திய மலிவு விலை மதுவை ஒழிக்கக் கோரி தலைமைச் செயலகத்துக்கு எதிரில் கருப்பு உடை அணிந்து எனது தலைமையில் ஒப்பாரி போராட்டம்.
- 29.08.2003 அன்று திண்டுக்கலில் மதுவிலக்கை வலியுறுத்தி மகளிர் போராட்டம்.
- 2004 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு கோரி பா.ம.க. மகளிர் அணி சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். தைலாபுரம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ற போது நானும் கைது ஆனேன். இந்த போராட்டத்தின்போது 15 ஆயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
- 02.03.2007 அன்று மதுக்கடைகளில் குடிப்பகங்கள் திறப்பதை கண்டித்து எனது தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்
- 08.03.2007 அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்.
- 15.05.2007 அன்று தமிழகத்தில் மதுவின் தீமைகளை வலியுறுத்தியும், மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து விளக்கவும் பரப்புரை ஊர்தி பயணத்தை சென்னையில் நான் தொடங்கி வைத்தேன்.
- 18.05.2007 சென்னையில் எனது தலைமையில் மது ஒழிப்பு பிரச்சாரக் கூட்டம்.
- 17.10.2007 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
- 27.02.2008 அன்று சென்னையில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு.
- 2008 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்.
- 17.08.2008 அன்று திருச்சியில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு.
- 18.08.2008 அன்று திருவண்ணாமலையில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
- 23.11.2008 அன்று சென்னையில் மது ஒழிப்பு கலந்தாய்வுக் கூட்டம்.
- 27.06.2009 சென்னையில் மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு பேரணி
- 04.05.2011 மது விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் தோனியை கண்டித்து சென்னையில் அவர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு பசுமைத் தாயகம் சார்பில் போராட்டம்.
- 07.07.2012 அன்று மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் துண்டறிக்கைகளை நான் வழங்கினேன்.
- 17.07.2012 அன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு போராட்டம். சென்னையில் போராட்டம் நடத்திய நான் கைது செய்யப்பட்டேன்.
- 19.07.2012 அன்று கோவையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி; நான் பங்கேற்றேன்.
- 04.09.2012 அன்று மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் மதுரையில் கண்காட்சி; நான் பங்கேற்றேன்.
- 17.12.2012 அன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு போராட்டம். சென்னையில் போராட்டம் நடத்திய நான் கைது செய்யப்பட்டேன்.
- 26.02.2013 மதுவிலக்கை வலியுறுத்தி தருமபுரியில் பா.ம.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.
- 04.01.2014 திண்டிவனத்தில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க. மகளிர் அணி சார்பில் மதுவுக்கு எதிரான மகளிர் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இத்தகைய எழுச்சி மாநாடுகள் நடத்தப்பட்டன.
- 13.02.2015 தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ம.க. போராட்டம். சென்னையில் நானும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி பங்கேற்பு
- 31.03.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தருமபுரியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம். பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி மற்றும் 50 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.
- 02.05.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் போராட்டம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
- 06.07.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டியில் மாபெரும் போராட்டம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
- 30.07.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் மாபெரும் போராட்டம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்றார்.
- 08.08.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் மாபெரும் போராட்டம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
- 15.08.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சார்பில் கள்ளக்குறிச்சியில் மாபெரும் போராட்டம்.
- 04.09.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மாபெரும் போராட்டம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
- 07.09.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் போராட்டம். சுவாமி அக்னிவேஷ் பங்கேற்பு.
- 24.09.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
- 15.11.2015 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேலத்தில் மாபெரும் போராட்டம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
- 03.02.2016 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மதுரையில் மாபெரும் போராட்டம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
இவை அனைத்தும் என் நினைவில் இருந்தவை தான். இவை தவிர மதுவிலக்கை வலியுறுத்தி இன்னும் ஏராளமான போராட்டங்களை பா.ம.க. நடத்தியுள்ளது. இனிவரும் காலங்களிலும் நடத்தும். தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வரை ஓய மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.