டாம் அண்ட் ஜெர்ரி மட்டும் tom and jerryதான் பார்ப்பேன்.அடம்பிடிக்கும் பூனை.மொபைலில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் வீடியோவை ரசித்து பார்க்கும் பூனையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வருகிறது
இன்றைய நவீன உலகில் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தாத மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்கிற சூழல் இருக்கிறது. அந்த அளவிற்கு ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கருவறையில் இருக்கும் போதும் கல்லறையில் இருக்கும் போதும் மட்டுமே மனிதன் மொபைலை பயன்படுத்துவதில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று 6 மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆன்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தாதவர்கள் இல்லை எனும் அளவுக்கு இன்று அதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அக்கரைக்கோட்டகம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி.இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு லூசி என்று பெயரிட்டு அழைத்து வருகிறார்.
இந்த பூனை ஜெயலெட்சுமி பயன்படுத்தும் மொபைலில் அடிக்கடி டாம் அன்ட் ஜெர்ரி tom and jerryகார்டூன் தொடரை ரசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நாள் ஜெயலெட்சுமி சமையலுக்கு காய் அறிந்து கொண்டிருந்த போது காமெடி சீனை தனது மொபைலில் வைக்கிறார் அதை அந்த பூனை அதனை தன் காலால் நிறுத்துகிறது. தொடர்ந்து பக்தி பாடல்கள் வைக்கிறார் அதையும் அந்த பூனை நிறுத்துகிறது.
அதனையடுத்து அவர் டாம் அண்ட் ஜெர்ரிtom and jerry கார்ட்டூன் தொடரை வைத்ததும் அந்த பூனை ஆர்வமாக பார்க்கிறது.பின்பு மொபைல் போனுக்கு பின்புறம் சென்று அதிலிருந்து இந்த கார்டூன் எங்கிருந்து வருகிறது என்பது போல பார்க்கிறது. அதனைத் தொடர்ந்து நன்கு சாகவாசமாக உட்கார்ந்தவாறு பூனை கார்டூன் தொடரை ரசித்து பார்க்கிறது.இந்த வீடியோ ஜெயலட்சுமியின் தோழியால் எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.