DMK councilor Kajamalai Vijay : திருச்சி மாநகராட்சி அலுவலக வாயிலில் தனக்கும், தனது சட்டைப்பையில் வைத்திருக்கும் ஸ்டாலினின் புகைப்பட த்துக்கும் சேர்த்து பெட்ரோல் அபிஷேகம் செய்து தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய்.
திருச்சி மாநகராட்சி, 60வது வார்டு திமுக கவுன்சிலரான காஜாமலை விஜய், தனது வார்டு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்தும், திமுக மேயர் அன்பழகன் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், மாநகராட்சி கூட்டத்தில் அதுகுறித்து கண்ணீரோடு புகார் கூறிய காஜாமலை விஜய், நான் இனிமேல் கவுன்சிலராக இருக்கப்போவதில்லை என்று கூறி, தன்னுடைய பதவியை ராஜிமானா செய்வதாக ஆணையரிடம் கடிதம் கொடுத்துவிட்டு, அதன் நகலை மேயர் அன்பழகனுக்கும் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : “என்னுடைய ஆசான் டாக்டர் கலைஞர்” – மீண்டும் வைரலாகும் குஷ்பு வீடியோ..!
தொடர்ந்து என்னுடைய வார்டில் பணிகள் நடக்கவில்லை என்றால் தீக்குளித்துவிடுவதாக கூறியவர், சொன்னபடியே மாநகராட்சி மன்ற வாயிலில் வைத்து தான் ஏற்கனவே எடுத்துவந்த பெட்ரோலை,
தனது உடலிலும், சட்டைப் பையில் இருந்த ஸ்டாலினின் படத்திலும் ஊற்றிக் கொள்ள அங்கிருந்த கட்சிக்காரர்களும், காவல்துறையினரும் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் மீது தண்ணீரையும் எடுத்து ஊற்றியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த மேயர் அன்பழகன் அவரை சமாதானம் செய்து உள்ளே அழைத்தும் முரண்டுபிடித்தபடி தனது காரில் ஏறிச் சென்றிருக்கிறார் காஜாமலை விஜய்.
நேருவின் தீவிர விசுவாசியான காஜாமலை விஜய், சமீபத்தில் திருச்சி சிவாவின் வீட்டில் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இதனால் காஜாமலை விஜய் உள்பட 5 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
அந்த விலகல் இன்னும் வாபஸ் பெறப்படாத தால் தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்துள்ளார் காஜாமலை விஜய்.
அதற்கு எந்த பதிலும் வராத நிலையில் தான், தற்போது தீக்குளிக்க முயன்று திமுக தலைமையின் கவனத்தை பெற முயற்சிக்கிறாரா? என்னும் கேள்விகளும் எழுந்துள்ளது.
காஜாமலை விஜயின் தீக்குளிப்பு முயற்சியின் போது அதனை படம் எடுத்த ஊடகவியலாளர்களை கட்சிக்காரர்கள் மிரட்டியுள்ளனர்.
மேலும், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஜூலர்பென்கர் என்பவரை காஜாமலை விஜயின் கார் ஓட்டுநர் தாக்கவே அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : “போஸ்டர தொட்டா ரோட்ல உக்காருவேன்” – முன்னாள் அமைச்சர் CV சண்முகம்!
இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் அன்பழகன் பத்திரிகையாளர்களை அழைத்து மன்னிப்பு கோரியுள்ளார்.
திமுக மாநகராட்சியில், தனது வார்டில் பணிகள் நடைபெறவில்லை என்று திமுக கவுன்சிலரே DMK councilor Kajamalai Vijay தீக்குளிக்க முயன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.