சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,7 லட்சியத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டங்கள் மட்டுமின்றி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சத்துணவு வழங்குதல், திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500, முதல்வரின் காலை உணவு திட்டத்தை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்துதல், பல்வேறு அரசு பணிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.1,136 ஆகிய திட்டங்கள் உள்ளன.
மேலும் பல்வேறு மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்றவற்றை தொடங்கி வைத்தார்.
மேலும் சென்னை பெருநகரில் பாதாள சாக்கடை பணிகளை நவீனப்படுத்துதல் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தொழில்முனைவோராக ஒருங்கிணைக்கும் சிறப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1 தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும்
2 மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுக்க Dacci அமைப்புடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
3 நவீன இயந்திரங்கள் மூலம் பாதாளச் சாக்கடை கழிவுகள் அகற்றப்பட உள்ளன.
4 தூய்மைப் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பை மேம்படுத்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.