தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்தால், பள்ளி மூடப்படுவது மற்றும் தேர்வுகள் நிறுத்தப்படுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து கர்நாடகா அரசு பின்வாங்காது மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிக்மகளூர் மாவட்டத்தின் சீகோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்காரணமாக குறிப்பிட்ட பள்ளி சீல் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்ந்து நிலைமை மோசமாக சென்றால் தேர்வுகள் நிறுத்தப்படும். மற்றும் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மூடும் நிலை ஏற்படும் என்றும் அப்படிப்பட்ட நிலை எழுந்தால் அதிலிருந்து அரசு பின்வாங்காது என கர்நாடக மாநில கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலம் முழுவதும் ஏற்படும் கொரோனா பாதிப்புகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என தெரிவித்த அவர் மாணவர்களின் நிலைமையை நினைத்து பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மாணவர்களின் உடல்நலனிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சூழல் அமையாது என்றும் தெரிவித்துள்ளார்