எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் (AIADMK Election Manifesto) எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள நிலையில் அதில் மக்களுக்கு பயன் தரும் முக்கிய அம்சங்கள் இருப்பதாகவும் சில வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்த முடியுமா என்றும் கலவையான விமர்சனங்கள் இணையத்தில் உலா வருகின்றன .
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் நாடு முழுவதும் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது .
Also Read : https://itamiltv.com/dmk-campaign-song-stirring-up-controversy/
இந்நிலையில் இன்று அதிமுகாவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை :
மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை.
ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
இதில் இருக்கும் பல மக்களை கவரும் வகையில் இருந்தாலும் சில வாக்குறுதிகள் சில (AIADMK Election Manifesto) வாக்குறுதிகள் உண்மையில் நடைமுறைப்படுத்த முடியுமா என்றும் இணையத்தில் கேள்விகள் இழுபட்டு வருகின்றன.