சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ. 43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தில் விலையில் மற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ. 43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளி விலையை பெருத்த வரையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் உயர்ந்து, 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ வெள்ளியின் விலை 80.000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.