விழுப்புரத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பள்ளி மாணவியின் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்(villupuram) மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் தீக்காங்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் கலைச்செல்வன். இவரது மகள் ராஜேஸ்வரி (15) மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 5ம் தேதி முதல் காணாமல் போனார்.
இதனையடுத்து பள்ளி மாணவி ராஜேஸ்வரி மாயமான இந்த வழக்கில், இன்று திக்கங்குப்பம் கிராமத்தில் உள்ள துளசி விவசாய கிணற்றில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
தகவலறிந்த மேல்மலையனூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றிலிருந்த மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என வளத்தி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு விசாரணை நடத்தி வருகிறார்.
காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.