ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீர்கள் பெற்று வந்த ஊக்கத்தொகை உயர்தப்படுவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டபேர்வரையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.14 லட்சத்திலிருந்து ரூ. 28 லட்சமாக உயர்வு
ஒலிம்பிக் விளையாட்டிற்கு வழங்கப்பட்ட சங்க மானியம் ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்வு
ஒலிம்பிக் அல்லாத விளையாட்டிற்கு வழங்கப்பட்ட சங்க மானியம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்வு
வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்/ வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 2 லட்சம் நிதி ரூ.4 லட்சமாக உயர்வு
மினி ஸ்டேடியம் இல்லாத சட்டமன்ற தொகுதிகளில், அதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய்ந்து மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை
மதுரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் Diving Pool-உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கப்படும்
Also Read : கேரளாவில் ரயிலில் எஞ்சினில் இருந்து கழன்ற பெட்டிகள் – பீதியில் உறைந்த பயணிகள்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
7000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
40,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.90 கோடி செலவில் வழங்கப்படும்.
10,000 சுய உதவிக் குழுக்களுக்கு 10 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.