இந்தியாவில், கொரோனா பாதிப்பு (covid infections) மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு (covid infections) விவரம் பின்வருமாறு..
இந்தியாவில், மேலும் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் மேலும் 26 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.