இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு (new cases) 6,660 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 112 பேருக்கு (new cases) தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 7 ஆயிரத்து 178 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி வரும் நிலையில், இன்று பாதிப்பு எணிக்கை 6,660 ஆக குறைந்து உள்ளது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 6,660 அகா குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் படி இதுவரை, கொரோனா பாதிப்பில் இருந்து 9,213 பேர் குணம் அடைந்துள்ளனர் எனவும், தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.