Director Ameer-டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில்தான் ஜாபர் சாதிக், பிற சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்..!!
இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர் ஜாபர் சாதிக்கை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி வட மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தினை இயக்குநர் அமீர் இயக்கி நடித்து வந்தார். அந்த படத்திற்கு இறைவன் மிகப்பெரியவர் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான் இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரும் 2ம் தேதி இயக்குநர் அமீரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.