தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது, இந்த சூழலில், 2026 தேர்தலில், மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம் என இண்டியா டுடே நிறுவனம் புள்ளி விபரங்களுடன் இண்டியா டுடே நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது, அதிமுக – பாஜக கூட்டணி முடிவு செய்யப்பட்டு எதிர்வரும் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி மேடையில் வைத்துக்கொண்டு அமித்ஷா அறிவித்தார்.
இந்த சூழலில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து `இண்டியா டுடே’ நிறுவனம் சர்வே கட்டுரை ஒன்றை வெளியிட்டது..

அதில், அதிமுக பாஜக கூட்டணிக்கு சாதகமாக தமிழக முதல்வர் ஸ்டாலினின் 4 ஆண்டு ஆட்சியின் தவறுகள் மற்றும் அரசு மீதான மக்களின் எதிர்ப்பு மனநிலையை வைத்து ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் அதிமுக –பாஜக கூட்டணி இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், விஜய் கட்சியான தவெகவும் முதன்முதலாக களமிறங்குவதால் மும்முனை போட்டி நிலவும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில், டிடிவி தினகரன், ஓபன்னீர் செல்வம், ஆகிய இரண்டு பேருடன் கூட்டணி வைத்ததை பிழை என உணர்ந்த பாஜக இம்முறை அதிமுக கூட்டணிக்கு அச்சாரமிட்டுருக்கிறது.. முன்னதாக, அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, தொடர்ந்து இழிவாக பேசிவருகிறார் என பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது.. பிறகு பாராளுமன்ற தேர்தலில் பெரிய அளவிலான கூட்டணி அமைக்கவில்லை என்றாலும், அதிமுக 23% வாக்குகளை பெற்றிருந்தது. அப்போது, திமுக கூட்டணி 47% வாக்குகளையும், பாஜக கூட்டணி 18% வாக்குகளையும் பெற்றிருந்தது.. ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணி வைத்திருந்தால் 13 எம்.பிக்களோடும், 84 எம்.எல்.ஏக்களையும் பெற்று 41% வீதத்திற்கும் அதிகமான வாக்குளை அக்கூட்டணி பெற்றிருக்கும் என புள்ளி விபரங்களுடன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிமுகவுக்கான ஆதரவு அலை:
1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக உருவானது. அதற்கு பிறகு 11 தேர்தல்கள் நடந்துள்ளன. அவற்றில் 4 தேர்தல்களில் மட்டுமே அதிமுகவை விட திமுக அதிக வாக்குகள் பெற்றது. 6 தேர்தல்களில் அதிமுக அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. அதன்பிறகு நடந்த 5 தேர்தல்களில் 3 தேர்தல்களில் அதிமுகவும் கூட்டணி கட்சிகளும், திமுக கூட்டணி கட்சிகள் இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தன..
அதிமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் அதிமுகவுக்கான வாக்கு சதவீதத்தில் வலிமை குறையாமல் இருக்கிறது என்பதை கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல் வரையிலும் நிருபித்திருக்கிறது.
2021 சட்டமன்ற தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு 66 தொகுதிகளை பெற்று வலிமையான எதிர்கட்சியாக அமர்ந்த அதிமுக, அதன் கூட்டணி 33.3% சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அப்போது திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 37.7% சதவீதம். பல்வேறு தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் தோராயமாக 4% வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. திமுக வெறும் 4% வாக்குகள் அதிகம் பெற்று ஆட்சியில் அமர்ந்தது.

இந்த கணக்கை வைத்து தான் அதிமுக இம்முறை அடித்து ஆட முடிவு செய்திருக்கிறது.
2001,2011,2016 காலக்கட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுக வலிமையான கூட்டணி இல்லாமலேயே ஆட்சியை பிடித்தது. தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்ததோடு சிம்பிள் மெஜாரிட்டியை தாண்டி, அந்த 3 சட்டமன்ற தேர்தல்களிலும்(2001,2011,2016) 132,150,133 இடங்களை பெற்றிருந்தது அதிமுக.
இதையெல்லாம் மனதில் வைத்துதான் அதிமுக தெம்போடு இந்த தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. திமுகவுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கான முனைப்பில் 2026-ஐ எதிர்நோக்கியிருக்கிறது அதிமுக.
அதுமட்டுமின்றி, இண்டியா டுடே கட்டுரையில் தொடர்ச்சியாக, அதிமுக 50% அதிகமான, அதாவது 119 தொகுதிகளில் வலிமையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது., அதில், மிகவும் வலிமையாக 38 தொகுதிகளிலும், அந்த தொகுதிகளில் திமுக – காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், 81 தொகுதிகளில் வலிமையாகவும், திமுக-காங்கிரஸ் 62 தொகுதிகளிலும், ஓரளவு கனிசமாக 77 தொகுதிகளில் அதிமுக வலிமை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதிமுகவுக்கு பலவீனமாக 38 தொகுதிகளும், திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 66 தொகுதிகளும் பலவீனமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
MK ஸ்டாலின் பிரபலமாக இருந்தாலும், அவருக்கு ஆட்சிக்கு எதிரான மனநிலை தெரியும்; இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுவரை போன்ற பிரச்சினைகள் மூலம் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்.
பாஜகவுக்கு எதிரான தனது நிலைப்பாடு மாநிலத்தில் காவி கட்சியை தீண்டத்தகாதவர்களாக மாற்றும் என்று திமுக நம்புகிறது. . உள்ளூர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் அதிமுக-பாஜக கூட்டணி, தங்களுக்கு சாதகமாக செயல்படும் என்று நம்புகிறது!
முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சிக்கு எதிராக இருக்கும், எதிர்ப்புகளை சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வந்தாலும் எதிர்வரும் தேர்தலை சந்திப்பதில் மிகப்பெரும் சவால்களை முதல்வர் ஸ்டாலின் எதிர்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் இந்த வாய்ப்பை அதிமுக-பாஜக கூட்டணி எப்படி சரியாக பயன்படுத்தப்போகிறது? அரசுக்கு எதிரான Anti incumbency- ஐ அதிமுக எப்படி தனக்கு சாதகமாக்கிக் கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…