PM Modi In UAE | அபுதாபியில் ‘அஹ்லான் மோடி’ நிகழ்ச்சியில், கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு நேற்று மாலை தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் சயீத் அல் நஹ்யான் (Zayed Al Nahyan) ஆரத்தழுவி வரவேற்றார் .
இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் குறிப்பாக இந்தியாவின் UPI மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் AANI ஆகிய சேவைகளை இணைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: Donald Trump | ”கூட்டமைப்புக்கு நிதி ஒதுக்காத நாடுகள்..”டிரம்ப் எச்சரிக்கை!
அதேபோல் இரு நாடுகளின் உள்நாட்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை இணைக்கும் வகையில் இந்தியாவின் RuPay மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் JAYWAN இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இருநாடுகளிடையே நிதித்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ரூ-பே பயன்பாட்டை அதிகரிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அபுதாபியில் அபுதாபியில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ‘அஹ்லான் மோடி’ நிகழ்ச்சியில், பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அபுதாபி வாழ் இந்தியர்களை நினைத்து பெருமை கொள்வதாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் பேசி பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1757635154862882899?s=20
தொடர்ந்து பேசிய அவர்,”இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (PM Modi In UAE ) இடையேயான உறவு திறமை, கண்டுபிடிப்பு மற்றும் கலாச்சாரம் பற்றியது.
கடந்த காலங்களில், நாங்கள் எங்கள் உறவுகளை, ஒவ்வொரு திசையிலும், மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளோம். இரு நாடுகளும் ஒன்றாக நடந்து, ஒன்றாக முன்னேறியுள்ளன.
இன்று, UAE இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. UAE ஏழாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது.
மேலும் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியனின் குறிக்கோளும். பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடு எது? நமது இந்தியா..
உலகின் மூன்றாவது பெரிய தொடக்கத்தை கொண்ட நாடு எது? நமது இந்தியா.
எங்கு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் முதலில் அங்கு சென்றடையும் நாடுகளில் இந்தியா என்ற பெயரும் வருகிறது.
இன்றைய வலிமையான இந்தியா ஒவ்வொரு அடியிலும் மக்களுடன் நிற்கிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.