india vs england : இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய டெஸ்ட்டில் கில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் கில்லுக்கு மாற்றாக சர்ஃப்ராஸ் கான் ஃபீல்டிங் செய்கிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ( india vs england )இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 112 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 396 ரன்களை எடுத்தது.
https://x.com/ITamilTVNews/status/1754100660965187886?s=20
இதில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி பும்ராவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பும்ரா 15.5 ஓவர்கள் வீசி 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விடவும் முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/02/image-42.png?resize=600%2C338&ssl=1)
இதில் இந்திய அணி 255 ரன்களை எடுத்தது. அதன்படி இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இதையும் படிங்க : வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் collection Report
இதில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் 104 ரன்களை எடுத்தார்.
முதல் இன்னிங்சில் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து அவுட் ஆப் பார்மில் இருந்த கில் இரண்டாவது இன்னிங்சில் 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 147 பந்துகளில் 104 ரன்களை எடுத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் கில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், கில்லுக்கு மாற்றாக சர்ஃப்ராஸ் கான் ஃபீல்டிங் செய்கிறார்.