மாஸ்கோ நோக்கிச் சென்ற இந்திய பயணிகள் விமானம் (Plane) ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இருந்து மாஸ்கோ நோக்கி பறந்து சென்ற இந்திய பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக அதிர்த்தி தகவல் வெளியாகி உள்ளது
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜிபாக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி அந்த விமானம் நொறுங்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது
விபத்துக்குள்ளான இந்த இந்திய விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அதில் எத்தனை பேர் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் இன்னும் சரியாக வெளியாகவில்லை
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் விபத்துக்குள்ளான இந்த விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என்றும் இந்திய போக்குவரத்து அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால் விபத்துக்குள்ளான விமானம் மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் விமான என கூறப்படுகிறது .
இந்த விமானம் பிரான்ஸ் தயாரிப்பான டசால்ட் பால்கன் 10 ஜெட் வகையை சேர்ந்தது என்றும் அந்த விமானத்தில் 6 பேர் பயணித்ததாகவும் கூறப்பட்டது.
இருப்பினும் இந்த தகவல் அனைத்தையும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
அப்படியே இந்த பக்கம் இந்த விமான விபத்து சீனா – தஜிகிஸ்தான் எல்லையோர பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மலைப் பிரதேச பகுதியில் விபத்து நடந்த நிலையில், இன்று (ஜன. 21) காலை உள்ளூர் மக்கள் அளித்த தகவலை தொடர்ந்து
(Plane) விமான விபத்து நடந்தது தெரியவந்ததாக ஆப்கானிஸ்தான் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Also Read https://itamiltv.com/two-painting-art-at-same-time-with-lip/
சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவை சேர்ந்தது எனவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது