உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட அக்னி -5 ஏவுகணை சோதனை (sheena rani ) வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் ஆட்டத்தில் மூளையாக செயல்பட்ட பெண் விஞ்ஞானி ஷீனா ராணிக்கு தற்போது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
ஒரே சமயத்தில் பல்வேறு இலக்குகள் மேல் தனித்தனியாகவும் துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும் திறன்கொண்ட, அக்னி 5 ஏவுகணையை உருவாக்கிய திவ்யாஸ்திரா திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி ஷீனா ராணி .
மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டது அக்னி-5 ஏவுகணை.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட அக்னி -5 ஏவுகணையின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்ததோடு நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இப்படி அனைத்திலும் படிப்படியாக முன்னேறி வரும் நம் நாடு இன்னும் சில (sheena rani ) ஆண்டுகளில் யார் கையையும் எதிர்பார்க்காமலே தன்னிச்சையாக செயல்படும் அளவிற்கு வளர்ந்து விடும் என முக்கிய பொறுப்புகளில் இருக்கும் வல்லுநர்கள் தகவல் தெரிவித்துளள்னர்.