திமுக என்றால் பரம்பரை, பண மோசடி, கட்டப்பஞ்சாயத்து என்று தேர்தல் பிரசாரத்தின் போது ஜே.பி.நட்டா புது விளக்கம் ( New description ) அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த ரோடு ஷோவின் போது திரளான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் ஜே பி நட்டாவிற்கு வரவேற்பு அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது “பாரத் மாதா கி ஜே” “பலாப்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டனர்
பிரசாரத்தின்போது ஜே.பி.நட்டா பேசியதாவது:-
தமிழகத்தில் திறமையான மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ஓ பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உலக நாடுகள் மத்தியில் இந்தியா முக்கிய இடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் பெற்றுள்ளது. நடைபெற உள்ள மக்களவைத் நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி அடையச் செய்ய வேண்டும்.
Also Read : https://itamiltv.com/aiadmk-special-campaign-in-ranipet/
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் மகளிர் முன்னேற்றத்திற்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து வருகிறது.
இந்தியாவில் மருத்துவ வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு சார்பில் ரேஷன் கடையில் ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 25 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் பயனடைந்துள்ளனர் .
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ரேஷன் கடை மூலமாக பொருட்கள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும்
தமிழகத்திற்கு வழங்கக்கூடிய நிதி நான்கு மடங்கு மத்திய அரசு உயர்த்தி வழங்கி உள்ளது.
தமிழகத்தின் மீது மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது .இதனால் 12000 கிலோமீட்டர் தூரம் சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா இன்று முதலிடத்தில் இருப்பதற்கு ( New description ) மோடி அரசு காரணம் என்றவர் தொடர்ந்து பேசுகையில், D-For Dynasty- ரம்பரை, M-For Money Laundering- பண மோசடி, K For Kattapannjayat – கட்டபஞ்சாயத்து என திமுக குறித்து புது விமர்சனத்தை முன் வைத்தார்.