வங்கதேச உள்நாட்டு கலவரம் அசாதாரணமான சூழல் காரணமாக வங்கதேச – இந்திய எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .
வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவே தற்போது போராட்டக் குழுவினரின் முக்கியமான கோரிக்கையாக இருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இதுநாள் வரை வசித்து வந்த பிரதமர் இல்லத்தை விட்டு உடனே வெளியேறினார்.
Also Read : ‘பொய் சொல்லிவிட்டு கிளம்பிட்டாங்க – துரை வைகோ வேதனை..!!
இதையடுத்து வங்கதேசத்தின் முழுப் பொறுப்பையும் ராணுவம் ஏற்றுக்கொள்வதாகவும் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ராணுவம் கட்டாயம் நிறைவேற்றும் எனவும் அந்நாட்டின் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வங்கதேச உள்நாட்டு கலவரம் அசாதாரணமான சூழல் காரணமாக வங்கதேச – இந்திய எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .
வங்கதேசத்துடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் 4,096 கி.மீ., எல்லையின் பாதுகாப்பை தீவிரப்படுத்த எல்லையோர பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.