ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு ஈராக் நகரமான ஹம்தானியாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 100 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் தீ விபத்தில் சிக்கி கொண்டவர்கள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில், திருமண மண்டபம் முழுவதும் கரும்புகை பரவியதால் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிந்துள்ளனர். மேலும், இதுவரை இந்த தீ விபத்தில் சிக்கி 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து பற்றிய முதற்கட்ட விசாரணையில், இந்த திருமண நிகழ்ச்சியில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அப்போது, அந்த மண்டபத்தில் அதிகம் தீப்பற்ற கூடிய பொருட்கள் இருந்ததே இந்த விபத்து ஏற்படக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் கந்துகொண்ட போது தீ விபத்தில் சிக்கி 100 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.