ஐஸ்வர்யா ராய் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்தார் ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஐஸ்வர்யா ராய் கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அபிஷேக்பச்சன் அவருடைய கையில் திருமணம் மோதிரம் இல்லாமல் இருப்பதைப் பார்த்து இருவரும் விவாகரத்து செய்துகொள்ள உள்ளதாக வதந்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்கு இவர்கள் இருவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அபிஷேக் பச்சனின் அக்கா ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா அறிமுகமாகும் ‘தி ஆர்ச்சிஸ்’ படத்தின் பிரிமியர் ஷோவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் நடிகை ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
https://www.instagram.com/reel/C0ebOfDrTfx/?utm_source=ig_web_copy_link