நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொறுப்பாளர்கள் 2 பேர் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் அறிக்கை வெளியிட்டார். அதில்,
2021-ம் ஆண்டு YouTuber ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த YouTuber-ஐ கைது செய்து, பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.
சமீபத்தில், அதே YouTuber பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் Cyber Crime காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த YouTuber சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார். விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது.
எனவே. அதற்கு எதிராக Civil and Criminal Defamation Notice என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் அனுப்பினேன். ஒருங்கிணைப்பாளருக்கு நான் சட்டப்படி இந்த Notice அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் X தளத்தில் பரப்பினர்.
ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்ன செய்வார்கள்?..
இந்த கூட்டத்திற்குச் சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக சைபர் கிரைமில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும். இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவது உறுதி.” என கூறியிருந்தார்.
இதையும் படிங்க : சீமான் மீது மானநஷ்ட வழக்கு – திருச்சி எஸ்.பி. வருண்குமார்!!
இந்த நிலையில், அவருக்கு பதில் கொடுக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசி இருக்கிறார் சீமான்.
இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எஸ்.பி வருண்குமார் ஐ.பி.எஸ்ஸுக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசியதாவது,
“ஏற்கெனவே நான் 138 வழக்குகளில் இருக்கிறேன். அதை அதிகமாக்கி 200 வழக்குகள் ஆக்கிவிடுவோம் என நினைக்கிறார் எஸ்.பி வருண்குமார். வரலாற்றில் டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என இடம்பெற வேண்டுமில்லையா?
வருண்குமார் நீங்கள் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை செய்ய வேண்டும். திமுகவின் ஐ.டி விங்குக்கு வேலை செய்யக்கூடாது.
நான் பார்க்காத வழக்கா? நீ அதிகாரத்தில் ஒரு புள்ளி. நான் அதிகாரத்தையே எதிர்த்து சண்டை போட்டுட்டு இருக்கேன்.
இந்திய அரசையும் இந்த அரசையும் எதிர்த்து சண்டை செய்யும் எனக்கு நீங்கள் எல்லாம் எனக்கு எம்மாத்திரம்? நீங்கள் எதை அனுப்பினாலும் என் வீட்டில் ஐந்தாறு குப்பைத் தொட்டிகள் இருக்கிறது, கிழித்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்.” என கூறியுள்ளார்.