சீனாவில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் காங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, கழிவறைக்கு சென்று வர நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் விதமாக, அவர்கள் கழிவறையில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை எடுத்து சுவற்றில் ஒட்டி மிக மிக இழிவான செயலில் ஈடுபட்டுள்ளது.
Also Read : ஜனவரி மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் எத்தனை பேர் பயணம் தெரியுமா..?
இதுகுறித்த செய்திகள் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் “ஊழியர்களா இல்லை அடிமைகளா” என நிறுவனத்தின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீன இந்தியாவை போலவே கலாச்சாரத்தை பின்பற்றி வரும் நிலையில் மனிதநேயம் இல்லாமல் போன அந்நிறுவனத்தின் செயலுக்கு அந்நாட்டு அரசு ஏதும் நடவடிக்கை எஎடுக்குமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.