தூங்கியதற்காக தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது அந்நிறுவனத்தின் ஊழியர் வழக்குத் தொடர்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவில் 20 பிரபல நிறுவனம் ஒன்றில் ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த தன்னை சிறிது நேரம் தூங்கியதற்காக, வேலையை விட்டு நீக்கிவிட்டதாக தனது நிறுவனத்தின் மீது அந்நிறுவனத்தின் ஊழியர் வழக்கு தொடர்ந்து உள்ளார் .
தனது நிறுவனத்திற்காக அயராது உழைத்து வந்ததாகவும் நள்ளிரவு வரை பணி தொடர்ந்ததால் சற்று நேரம் ஓவிவெடுத்ததாகவும் ஊழியர் கூறியுள்ளார் . வேலையின் போது தூங்கியது நிறுவன கொள்கைக்கு மாறாக இருப்பாதாகக் கூறி தன்னை மனசாட்சி இன்றி பணிநீக்கம் செய்துவிட்டதாக அந்த ஊழியர் கூறியுள்ளார்.
இதனால் தான் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வருவதாகவும் தனக்கு 41.6 லட்சம் நஷ்டஈடு வேண்டும் என ஊழியர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.