டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கள் குறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஓமிக்ரான் கொரோனா பரவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றப்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு தற்போது பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடர்பான கால அட்டவணையும் வெளியாகி உள்ளது.
அதன்படி இத்தேர்வுகள் டிச.17 முதல் டிச.24ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நோக்கில் ஆசிரியர்கள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு முடிவடைந்த உடன் டிச.25 முதல் ஜனவரி 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.