தமிழகத்தில் கடற்கரைகளுக்கு செல்ல தடை? : பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை அடுத்து நடவடிக்கை!

new-years-eve-beach-ban-tn-restrictions
new years eve beach ban tn restrictions

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தடுப்பூசிகளும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து கோரோனா பரவல் குறைவடைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கபட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15 ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கபட்டதாக கூறப்படுகிறது.

new-years-eve-beach-ban-tn-restrictions
new years eve beach ban tn restrictions

அத்துடன் புத்தாண்டையொட்டி மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க வரும் 31-ஆம் தேதியும், புத்தாண்டு தினமான ஜனவரி ஒன்றாம் தேதியும் கடற்கரைகளில் அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts